உலகின் பெரும் செல்வந்தர்கள் வரிசையிலும் சரி, ஒரு நாட்டின் பெரும் செல்வந்தர்கள் வரிசையிலும் சரி, பெரும்பாலும் ஆண்களே இருப்பார்கள். ஆனால், ஆஸ்திரேலியாவின் முதல் செல்வந்தராக பல ஆண்டுகளாக இருப்பவர் திருமதி. ஜீனா ரைன்ஹார்ட். இவர் 2011 முதல் 2015 வரையிலும் பின்னர் 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளிலும் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் முதல் செல்வந்தராக இருக்கிறார். உலகின் பெருஞ்செலவந்தப் பெண்கள் வரிசையில் ஆறாவது இடத்தையும், உலகின் ஆளுமைமிக்க பெண்களின் வரிசையில் 45ஆவது இடத்தையும் வகிப்பவர். இவருடைய வாழ்க்கைப் பயணத்தில் எப்பொழுதும் பெரும் சவால்களை எதிர்கொண்டு வென்றவராக இருக்கிறார். இவர் ஹேங்காக் ப்ராஸ்பெக்டிங் (Hancock Prospecting Pvt Ltd) என்ற நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர். இவருடைய இன்றைய சொத்து மதிப்பு 30.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய ரூபாயின் மதிப்பில் இரண்டு லட்சத்து நாற்பத்தொன்பதாயிரத்து இருநூறு (24,920,000,000,000)கோடியாகும்.
லேங் ஹேங்காக்
ரைன்ஹார்ட் அவர்களின் தந்தையார் லேங் ஹேங்காக் (Lang Hancock) ஆஸ்திரேலிய சுரங்கத் தொழிலுக்கு தனித்துவம் வாய்ந்த முன்னோடியாவார். 1950களில் இருந்தே, மேற்கு ஆஸ்திரேலியாவின் வட பகுதியில் நிறைந்து கிடக்கும் இரும்புக் கனிம வளங்களைக் கண்டறிவதே இவருடைய பணி. சிறு விமானங்களில் பறந்து, தரையில் வித்தியாசமாக காணப்படுகின்ற பகுதிகளைக் கண்டறிந்து, பின்னர் அந்த இடங்களுக்கு நேரில் சென்று, மாதிரிகளைச் சேகரித்து, அவற்றில் உள்ள இரும்பின் அளவை ஆய்வுக் கூடங்களில் ஆய்ந்து, இரும்புச் சுரங்கம் அமைப்பதற்கான இடங்களைத் தேர்ந்தெடுப்பதே லேங் ஹேங்காக்கின் பணி. இதற்குண்டான ஆரம்பகட்ட செலவுகளை அவர் செய்வார். பின்னர் அந்த இடங்களை பி.ஹெச்.பி., ரியோ டின்டோ போன்ற உலகின் மிகப்பெரிய நிறுவனங்களிடம் குத்தகைக்கு விட்டு விடுவார். அந்த சுரங்க நிறுவனங்கள் அவருக்கு வெட்டி யெடுக்கப்படும் ஒரு டன் இரும்புக் கனிமத்திற்கு இத்தனை டாலர் என்று ராயல்டி என்று, சொல்லக்கூடிய உரிமைத் தொகை வழங்குவார்கள். அதில் வரும் வருமானத்தைக் கொண்டு மீண்டும் புதிய இடங்களை ஆய்ந்து கண்டுபிடிப்பார். இவரின் ஒரே மகள்தான் ரைன்ஹார்ட்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/australia_1.jpg)
இளமைக் காலம்
ரைன்ஹார்ட் மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் 1954ஆம் ஆண்டு பிறந்தார். பின்னர் இவருடைய தந்தையாரின் கால்நடைப் பண்ணை இருக்கும் மல்கா டவுன்ஸ் என்ற இடத்தில் வளர்ந்தார். இந்த கால்நடைப் பண்ணை, பெர்த் நகரிலிருந்து சுமார் 1435 கி. மீ. தொலைவில், பல லட்சம் ஏக்கர்களில் அமைந்துள்ளது. லேங் ஹேங் காக் தன் மகளைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, "ஜீனா என்னுடைய ஒரே மகள். உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லாததால் எல்லாவித கடுமையான பயிற்சிகளையும் ஜீனாவிற்கு அளித்து வளர்க்கிறேன்'’என்று கூறியுள்ளார்.
ரைன்ஹார்ட், பெர்த் நகரில் விடுதியில் தங்கி பள்ளிப் படிப்பை முடித்தார். சிறிது காலம் சிட்னி பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் பயின்றார். பின்னர் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு, தன் தந்தையாருக்கு உதவியாக அவர் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். இவருக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். இவருடைய கணவர் ஃப்ராங்க் ரைன்ஹார்ட் ஒரு அமெரிக்கர். இவர் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் பொறியியலும், சட்டமும் படித்தவர். சிறந்த வழக் கறிஞர். இவர் 1990ஆம் ஆண்டு மறைந்தார். ரைன் ஹார்ட் வேறு திருமணம் செய்து கொள்ளாமல் தன் நான்கு குழந்தை களையும் வளர்த்ததோடு, தன் தந்தையின் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இவருடைய தந்தையார் லேங் ஹேங்காக் 1992ல் மறைந்துவிட்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/australia1_1.jpg)
இரும்புச் சுரங்க நிறுவனம்
தன் தந்தையார் லேங் ஹேங்காக்கின் மறை விற்குப் பின்னர், 1992ல், ஹேங்காக் ப்ராஸ்பெக்டிங் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரானார், அப் பொழுது, அவருடைய தந்தையாரின் சொத்து மதிப்பு 75 மில்லியன் ஆஸ்திரேலிய டாலராக இருந்தாலும் அதற்கிணையாகக் கடனும் அவ ருடைய நிறுவனத்திற்கு இருந்தது. தன்னுடைய தொலைதூரப் பார்வையாலும், கடின உழைப் பாலும் ரைன்ஹார்ட் இவ்வளவு பெரிய தொழில் சாம்ராஜ்யத்தைப் படைத்திருக்கிறார். ரைன்ஹார்ட் டின் தொடக்கப்புள்ளியாக அமைந்த சுரங்கம் அவருடைய தாயார் ஹோப் மார்கரெட் பெயரால் அமைந்த ஹோப் டவுன்ஸ் (Hope Downs) என்ற இடத்தில் அமைந்த இரும்புச் சுரங்கமும் ராய் ஹில் (Roy Hill) என்ற இடத்தில் அமைந்த இரும்புச் சுரங்கமுமாகும். இதில் ஹோப் டவுன்ஸ் சுரங்கத்தில் ரியோ டின்டோ என்னும் நிறுவனம் உற்பத்திப் பணியைச் செய்கிறது. இதில் ரைன்ஹார்ட்டிற்கு 50 சதவீத பங்குகள் உள்ளன.
ராய்ஹில் இரும்புச் சுரங்கம்
ராய்ஹில் என்ற இடத்தில் உள்ள இரும்புச் சுரங்கத்தை ரைன்ஹார்ட் டின் நிறுவனமே நடத்து கிறது. இங்கு வெட்டியெடுக் கப்படும் இரும்புக் கனிமத்தை துறைமுகத்திற்கு கொண்டு செல்ல 350 கி.மீ. தூரத்திற்கு ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுரங்கப் பணியைத் தொடங்க ரைன்ஹார்ட் ஏராளமான நிதியைத் திரட்ட வேண்டியிருந்தது. அவர் உலகின் மிகப் பெரிய 19 வங்கிகளிடம் இருந்து 7.2 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடனாகப் பெறுவதற்கு உண்டான மிகப்பெரிய சவாலான பணியைச் செய்யவேண்டியிருந்தது. அது மட்டுமன்றி 5 தேசிய ஏற்றுமதி கடன் வழங்கும் நிறுவனங்களிடமும் நிதி திரட்டும் பணியைச் செய்ய வேண்டியிருந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/australia3.jpg)
இந்தச் சூழலைப் பற்றி அவர் பத்திரிகைகளிடம் கூறும்பொழுது, "எல்லா நிதியுதவிக் கடன்களும் சரி யான நேரத்தில் கிடைத்த காரணத் தால் இந்தத் திட்டம் குறித்த காலத் தில், திட்டமிட்ட செலவுத் தொகைக் குள்ளாகவே முடிந்து உற்பத்தியைத் தொடங்கி விட்டோம்''’ என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார். இந்தச் சுரங்கம் மட்டுமின்றி, அட்லாஸ் அயர்ன் என்ற சுரங்க நிறுவனத்தையும் ஹேங்காக் நிறுவனம் வாங்கிவிட்டது.
அன்று 75 மில்லியன் டாலருடனும், கடனுடனும் இருந்த நிறுவனத்தைக் கடந்த 30 ஆண்டு களில் கிட்டத்தட்ட 600 மடங்காக உயர்த்திக்காட்டியுள்ள ரைன்ஹார்ட், ‘அவருக்கமைந்த நிர்வாகிகள், தொழில்நுட்பவியலாளர்கள், சுரங்கத் தொழிலாளர்களின் கடின உழைப்பே இந்த வளர்ச்சிக்குக் காரணம்’ என்று குறிப்பிடுகிறார்.
கால்நடைப் பண்ணை கிட்மேன் & கோ
ரைன்ஹார்ட்டின் முன்னோர்கள் ஆஸ்தி ரேலியாவில் மிகப்பெரிய கால்நடைப் பண்ணை களை நடத்திவந்தார்கள். கால்நடைப் பண்ணை களை நிர்வகிப்பதிலும் ரைன்ஹார்ட் பயிற்சி பெற்றவர். 1899ல் சிட்னி கிட்மேன் என்பவர் ஒரு மிகப்பெரிய கால்நடை பண்ணையைத் தொடங்கி னார். இந்த கால்நடைப் பண்ணையில் சுமார் ஒன்றரை லட்சம் கால்நடைகள், பெரும்பாலும் இறைச்சிக்கான மாடுகள் உள்ளன. இந்தப் பண்ணைகளில் மூன்றில் இரண்டு பங்கினை ரைன்ஹார்ட்டின் ஹேங்காக் வேளாண் நிறு வனம் வாங்கியது.
பொதுத் தொண்டு
இப்படி, தான் ஈட்டும் பொருளில் கணிசமான தொகையை ரைன்ஹார்ட் பொதுத்தொண்டிற்கும், மக்களின் நல வாழ்விற்கும் செலவிடுகிறார். கம்போடியாவில் இருந்து அனாதைகளான 9 பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து, தன் சொந்த மகள்களைப் போலவே வளர்த்து வருகிறார். கம்போடியாவில் பெண் குழந்தைகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கொடியவர்கள் உள்ளார்கள். அப்படிப் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உதவுகிற தொண்டு நிறுவனங்களுக்கு பெரிய அளவிலான பொருளுதவிகளைச் செய்துவருகிறார். கம்போடியாவில் ஏழைப்பெண்கள் பட்டப் படிப்பு படிப்பதற்கு உதவித்தொகை வழங்கிவருகிறார்.
ஆஸ்திரேலிய ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் நீச்சல் வீரர்கள், வீராங்கனைகளின் பயிற்சிச் செலவுகளுக்கு உதவிவருகிறார். அதேபோல் விளையாட்டு வீரர்கள் பட்டப் படிப்பு படிப்பதற்கும் உதவித்தொகை வழங்கி வருகிறார். ஆஸ்திரேலியாவில் மார்பகப் புற்று நோயால் தாக்கப்படும் பெண்களும், அதனால் மரணமடைபவர்களும் அதிகம். அதற்காக தேசிய மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு(National Breast Cancer Foundation) பெரும் பொருள் வழங்கி வருகிறார். பல மருத்துவமனைகளைப் புதுப்பிப்பதற்கும் செலவழித்துள்ளார். ரைன்ஹார்ட்டின் பொதுத்தொண்டின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். தான் ஈட்டிய பொருளை இப்படி வாரி வழங்குவதால் இவரை "தங்க இதயம் கொண்ட இரும்புப் பெண்மணி' (The iron Lady with Golden Heart)’என்று போற்றுகிறார்கள்.
தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு தாராளமான ஊதியத்தோடு திடீர் பரிசுகளையும் வாரி வழங்குவதில் ரைன்ஹார்ட்டிற்கு இணையில்லை. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விருந்தில் தன் நிறுவனம் ஒவ்வொன்றிலும் பணி புரிபவர்களுக்கு, திடீரென அறிவித்து, குலுக்கல் முறையில் பெயரைத் தேர்ந்தெடுத்து சுமார் 56 லட்ச ரூபாய் (1,00,000 ஆஸ்திரேலிய டாலர்) வழங்கினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/australia-t.jpg)